அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், திடீர் டெல்லி பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளார். அவரது இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர அவகாசம் அளிப்பதாகச் செங்கோட்டையன் அறிவித்தார். இது பழனிசாமி தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தவே, அவரைக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்குப் பிறகு செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வந்தன.
டெல்லிக்கு புறப்படுவதற்கு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், நான் ஆன்மிகப் பயணமாக ஹரித்வாருக்குச் செல்கிறேன். ராமரை வணங்கப் போகிறேன், என்று தெரிவித்தார். மேலும், கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கியது மகிழ்ச்சியே. தர்மம் வெல்லும், என்று சூசகமாகப் பேசியது அரசியல் வட்டாரங்களில் அனல் பறக்க வைத்தது.
ஆனால், அவரது இந்த ஆன்மிகப் பயணம், அரசியல் பயணமாக மாறி, இன்று பிற்பகலில் டெல்லியில் அமித்ஷாவின் இல்லத்தில் அவர் இருப்பது உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி தலைவர்களை இணைக்கும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபடலாமென ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், அவரது இந்தத் திடீர் டெல்லி பயணம் அ.தி.மு.க.வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவுடனான இந்தச் சந்திப்பின் நோக்கம் என்ன என்பது குறித்துத் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.