வரும் ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெற உள்ள கட்சியின் மாநாட்டில், தேமுதிகவின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை. ஆட்சியில் பங்கு என்பதை தேமுதிக வரவேற்கிறது, என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்துப் பேசிய அவர், வெளிநாட்டு முதலீடுகள்மூலம் எவ்வளவு தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும். அவர் கூறுவது வெறும் சொல்லில் மட்டுமல்லாமல் செயல்வடிவம் பெற்று மக்களுக்கு ஆதாயம் கிடைக்கும்போதுதான் அவரது வெளிநாட்டுப் பயணம் பாராட்டுக்குரியதாக இருக்கும் என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். முதல்வர் கையில் தான் சட்டம் ஒழுங்கு இருக்கிறது. இதனை அவர் தான் சரி செய்ய வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; போதைப்பழக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தி தமிழ்நாடு பாதுகாப்பான பூமி என்பதை அரசு நிரூபிக்க வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தினார்.
இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டும், ஓட்டுக்குப் பகிரங்கமாகப் பணம் கொடுப்பதும் நடைபெறுகிறது. கடந்த 20 ஆண்டுகளாகப் புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதித்துறையும் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும்," என்று அவர் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பாராட்டிய பிரேமலதா, ஜிஎஸ்டி-யால் பல லட்சம் குடும்பங்கள் பயன்பெறுகின்றன. சிறுகுறு தொழில்கள் வளர்ச்சி அடைகின்றன. மக்களுக்கு நல்லது நடக்கும் எந்த ஆட்சியையும் நாம் வரவேற்க வேண்டும் என்றார்.
பிரதமர் மோடியின் செயல்பாடுகளைப் பாராட்டிய அவர், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 50 சதவீத வரிவிதிப்பை பிரதமர் மோடி சிறப்பாகக் கையாண்டார். அமெரிக்கா வல்லரசுதான். எல்லாரும் எனக்கு அடிமை என்ற அமெரிக்காவின் எண்ணத்தை மோடி மாற்றி இருக்கிறார். வெகுவிரைவில் இந்தியாவும், தமிழ்நாடும் வல்லரசு நாடுகளாக வரும் என நம்புகிறேன், என்று தெரிவித்தார்.
தனது அரசியல் ரோல் மாடல் குறித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஜெயலலிதா ஒரு இரும்புப் பெண்மணி. ஆளுமைமிக்க மனிதர். கட்சியையும் ஆட்சியையும் திறம்பட வழிநடத்தினார். முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படா விட்டாலும், எடப்பாடி பழனிசாமி நான்கு ஆண்டுகளில் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தார், என்று புகழாரம் சூட்டினார்.