தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கண்டித்து, அதிமுக கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் விலைவாசி உயர்வு விண்ணைத் தொட்டுள்ளதாகவும், சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்வால் சாமானிய மக்கள் குடும்பம் நடத்தவே திணறி வருவதாகவும் குற்றம் சாட்டினார். முதல்வர் ஸ்டாலின் தினந்தோறும் விளம்பரப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், நிர்வாகத்தில் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் சாடினார்.
சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்த விமர்சனம்
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, "தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டது. உளவுத்துறை முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டது" என்றார். மேலும், கடந்த 75 நாட்களில் மட்டும் 246 கொலைகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இன்னும் உண்மையான குற்றவாளிகள் கைதாகவில்லை என்று குறிப்பிட்டார்.
போதைப்பொருள் மற்றும் பொருளாதாரச் சூழல்
மேலும், "பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சீரழிக்கும் கஞ்சா விற்பனை தமிழகத்தில் தாராளமாக நடைபெற்று வருகிறது. வளர்ச்சியில் நம்பர் 1 என்று கூறும் முதல்வர், உண்மையில் கடன் வாங்குவதில்தான் தமிழகத்தை முதலிடத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். ஒவ்வொரு தமிழரையும் திமுக அரசு கடனாளியாக்கிவிட்டது" என்று அவர் கூறினார்.
ஆட்சி மாற்றத்திற்கான அறைகூவல்
திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, இந்த 'குடும்ப ஆட்சிக்கு' மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "வரும் மே மாதம் அதிமுக தலைமையில் நல்லாட்சி அமையும். அதற்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

LIVE 24 X 7