அரசியல்

vijay pressmeet: தவெக கட்சி தலைவராக முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு.. விஜய் என்ன சொன்னார்?

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் பேட்டி அளித்துள்ளார்.

vijay pressmeet: தவெக கட்சி தலைவராக முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு.. விஜய் என்ன சொன்னார்?
vijay pressmeet at chennai airport
vijay pressmeet: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை சென்று, அங்கிருந்து கொடைக்கானலில் நடைப்பெற உள்ள ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள உள்ளார். இதனிடையே, சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் தெரிவித்தவை பின்வருமாறு-

”மதுரை விமான நிலையத்தில் நமது தொண்டர்கள், தோழர்கள், தோழிகள் எல்லோரும் இருக்கிறார்கள். மதுரை மக்கள் எல்லோருக்கும் வணக்கம். உங்களுடைய அன்புக்கு வந்து கோடான கோடி நன்றிகள். நான் இன்று மதுரைக்கு போறது ஜனநாயகன் படத்தோட வேலைக்காக போகிறேன். கொடைக்கானலில் நடைப்பெறும் படப்பிடிப்புக்காக செல்கிறேன். நம்ம விரைவில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விரைவில் மதுரை மக்களை சந்திக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் மதுரை சென்றடைவேன். அங்கே உங்களை சந்தித்து விட்டு கொடைக்கானல் செல்கிறேன்.

தயவு செய்து யாரும் எனது வண்டியை அல்லது வேனை பின் தொடர்ந்து வர வேண்டாம். பைக் மேல நின்னுட்டு, ஹெல்மேட் இல்லாம அப்படியெல்லாம் வண்டி ஓட்டாதீங்க. அந்த காட்சியெல்லாம் பார்க்கும் போது மனம் ரொம்ப பதட்டமாகுது. கூடிய சீக்கிரம் வேறோரு சந்தர்பத்தில் சந்திக்கிறேன். உங்க எல்லோருக்கும் என்னுடைய மே தின வாழ்த்துகள். Love you all, see you all. மதுரை ஏர்ப்போர்ட்ல இந்த விஷயத்தை என்னால சொல்லமுடியுமானு தெரியல. அங்க சூழ்நிலை என்ன மாதிரி இருக்கும்னு தெரியல. அதனால இங்கேயே சொல்லிடுறேன்” என குறிப்பிட்டுவிட்டு விஜய் கிளம்பினார்.

பத்திரிக்கையாளர்கள் மற்ற கேள்விகள் எழுப்ப முயன்றபோது அதற்கு பதிலளிக்காமல் விமான நிலையத்திற்குள் சென்றார் நடிகர் விஜய்.