அரியலூர் மாவட்டம், ஜெயகொண்டம் அருகே குடிநீர் அசுத்தமாக வருவதாக திமுக எம்எல்ஏ கண்ணனிடம் அப்பகுதியினர் முறையிட்டனர். அப்போது திடீரென கோபமடைந்த எம்எல்ஏ கண்ணன் அசுத்தமான குடிநீர் கொண்ட பாட்டிலை பிடிங்கி வீசிவிட்டு தனது காரில் ஏறி சென்றார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு தாதம்பேட்டை புதுத்தெரு கிராமத்தில், கடந்த நான்காண்டுகளாகவே, மிகவும் அசுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்துப் பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர் வரை, பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை சுத்தமான குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், இன்று, அருகிலுள்ள கிராமத்திற்கு வருகை தந்த ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணனிடம், தங்கள் கிராமத்தில் வழங்கப்படும் அசுத்தமான குடிநீரை ஒரு பாட்டிலில் பிடித்து அவரிடம் காட்டுவதற்காக, கொண்டு சென்ற பொதுமக்களை அவமானப்படுத்தி, அந்த தண்ணீர் பாட்டிலைப் பிடுங்கி எறிந்து விட்டு, தனது காரில் ஏறி சென்றிருக்கிறார்.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் பொதுமக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்தார்களே தவிர, அவர்களை அவமானப்படுத்த அல்ல. நான்கு ஆண்டுகளாக, சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்கள் கோரிக்கையைக் காதுகொடுத்துக் கேட்பதைத் தவிர, வேறு என்ன வேலை கண்ணனுக்கு?
உடனடியாக, தா. பழூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களை அவமானப்படுத்தும் முன்பு, அந்த மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் பதவியும் இருக்காது, மரியாதையும் இருக்காது என்பது கண்ணனுக்கு நினைவிருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.