நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சித்தாளந்தூர் பகுதியில் மாவட்ட அதிமுக அம்மா பேரவை மற்றும் திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சித்தாளந்தூர் ஊராட்சியில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சாதனைகள் நான்காண்டு கால திமுக ஆட்சியின் அவலங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இது பிரச்சாரம் நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமையிலும் திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அணிமூர் மோகன் முன்னிலையில் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர், மாநில அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி கலந்து கொண்டு வணிக வளாகங்கள் மற்றும் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகளை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் இறுதியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது, கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டு உள்ளது என்பதற்கு சிவகங்கை காவல் நிலையத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமே சாட்சியாக உள்ளது. புகார் வராமலேயே தனிப்பிரிவு போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் அதற்கு இந்த முதலமைச்சர் ஆறுதல் கூறுவதும், வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் கூறுவதும், எத்தகைய செயல் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். மேலும், அப்பாவி இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது என கூறினார்.
இந்த ஆட்சி மீண்டும் தொடருமானால் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் என்ன நடக்குமோ என்ற அச்சத்தோடு வாழ வேண்டி வரும். தினமும் 5 கொலை 10 கொலை நடக்கிற அளவுக்கு கொலைகார மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. கொலை செய்பவர்கள் ஆட்சியாளர்களை கண்டு அச்சப்படுவதில்லை. போதைப்பொருள், கஞ்சா பழக்கம் அதிகமாக உள்ளது குற்றங்கள் மலிந்து போய் உள்ளது பாதுகாக்க வேண்டிய காவலர்ளே ஒரு அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினரின் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வராமலே புகார் பதிவு செய்யாமலே அடித்துக் கொள்ளும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.