சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கட்சி அலுவலகம் வந்த விஜய், தனது கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற செயலியை வெளியிட்டுத் தாத்தா, அப்பா, மகன் குடும்பத்தினருக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார் விஜய்.
பின்னர் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த MY TVK எனப் பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகப்படுத்தினார். இதனை அங்குக் கூடியிருந்த தவெக நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
தவெகவின் புதிய செயலி தொண்டர்கள் மத்தியிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்படுவதால், விரைவில் ஒரு பரந்த கூட்டமைப்பாகக் கட்சி வளரும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தவெக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை விரைவாகச் செயல்படுத்தவும், உறுப்பினர்கள் விவரங்களை மையமடைந்த முறையில் சேமிக்கவும், மாவட்ட மற்றும் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நிலைகளிலும் கட்டுப்பாடுடன் உறுப்பினர் தரவுகளைப் பராமரிக்க உதவுகிறது. எதிர்கால தேர்தல் திட்டங்கள், பயிற்சி முகாம்கள் போன்றவை குறித்து தகவல்களை உடனுக்குடன் உறுப்பினர்களுக்கு வழங்கிறது.
செயலியை அறிமுகப்படுத்தியபின் நகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், அண்ணா வழியில் மக்களிடம் செல்வோம் என்றும் மக்களிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்று கூறினார். 1967, 1977 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்போல 2026 தேர்தல் அமையும் என்று தெரிவித்தார். மதுரையில் நடைபெற இருக்கும் தவெக மாநாட்டிற்கு பின் மக்களைச் சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக வெற்றி பேரணியில் தமிழகம் என்ற பெயரில் சிறப்புக் காணொளி ஒன்று ஒலிபரப்பப்பட்டது. அதில் திமுக மற்றும் பாஜக மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தது. கொள்ளை மற்றும் ஊழல் மட்டுமே நிர்வாகமாகக் கொண்டு திமுக மாநிலத்தை ஆண்டுவருவதாகவும், மத்திய அரசுடன் திமுக மறைமுகமாகக் கூட்டணி வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.