அரசியல்

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!

மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!
சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசுவதைத் தொடர்ந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜ்க்குச் சென்றுவிட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். சி. பா. ஆதித்தனாரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பேசினார்.

சீமானுக்குக் கடுமையான கண்டனம்:

முதலில் சீமானைக் கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார், சனியில் பல்வேறு வகைகள் இருப்பதாகவும், எல்லா சனியும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்த உருவம் தான் சீமான் என்று கூறினார். சீமான் மீது நல்ல அபிப்பிராயம் இருந்தாலும், அவர் மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப் கொச்சைப்படுத்திப் பேசக் கூடாது என்று வலியுறுத்தினார்.

இது போன்ற ஈனச் செயல்களை எனது அருமை நண்பர் சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், மீண்டும் மீண்டும் விமர்சித்தால், தங்கள் பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும் என்றும், அவரைவிட நன்கு பேசத் தெரிந்தவர்கள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள்" என்றும் எச்சரித்தார்.

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜ் விமர்சனம்:

தொடர்ந்து சுகாதாரத்துறை குறைபாடுகள் குறித்துப் பேசிய ஜெயக்குமார், தனது சொந்த அனுபவத்தைக் கொண்டு அரசிடம் கேள்வி எழுப்பினார்.

காய்ச்சல் காரணமாக ஐந்து நாட்கள் என்னைப் படாதபாடு படுத்தி விட்டது. தனக்கு வந்த ஜுரம் எந்த வகையான ஜுரம், அது, இன்ஃப்ளுயன்சாவா என்னவென்றே தெரியவில்லை" என்று அவர் கூறினார். இந்தியாவில் பாதி மக்கள் தொகைக்கு மேல் இன்ஃப்ளுயன்சா தொற்றால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு தற்போதுதான் விழித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

கோமா நிலை: மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாஸ்க் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அரசு தவறிவிட்டது. தமிழ்நாட்டில் நடைபெறுவது "பொம்மை அரசாங்கம் என்றும், இதனால் மாநிலத்தின் சுகாதாரத்துறை "கோமா ஸ்டேஜிற்கு" சென்று விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

விழிப்புணர்வு நடவடிக்கை: மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என மக்களை விழிப்புணர்வு செய்வதற்காகவே தான் இன்று மாஸ்க் அணிந்து வந்ததாகத் தெரிவித்தார். "இந்த அரசு நம்மைப் பாதுகாக்காது, நாம்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறினார்.