தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று தமிழகம் வந்த நிலையில், அவரை டிடிவி தினகரன், அன்புமணி மற்றும் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை உணவு விருந்து அளித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இந்த உணவு விருந்து அளிக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்- பியூஸ் கோயல்
இந்த விருந்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது, "தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக நலனுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை. ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை முழுமையாக வீழ்த்தி அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வரும்.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திற்கான சிறந்த எதிர்கால வளர்ச்சியை கொண்டு வரும். நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும். திமுக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழகத்தில் பழனிசாமியும் தலைவர்கள் இருப்பார்கள்"என்றார்.
என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்- இபிஎஸ்
தொடர்ந்து, பேசிய எடப்பாடி பழனிசாமி, "பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ள கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். நாளை நடைபெறும் கூட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இந்த தொடக்கம் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக விளங்கும்.
தமிழகத்தில் பொதுமக்கள், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது. இந்த அரசு எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தை உருவாக்கி, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் பணியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. வலிமையான கூட்டணியாக விளங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். அப்போது தமிழகம் இதுவரை இல்லாத வளர்ச்சியை அடையும்” என்று அவர் தெரிவித்தார்.

LIVE 24 X 7