சேலம் மாவட்டம், வில்லியம்பட்டியில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை ரவுடிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் மணல் கடத்தல் குறித்து செய்தி சேகரிக்க சென்றபோது ரவுடிகள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சேலம் மாவட்டம், வில்லியம்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மண் அள்ளப்படுவதை செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், மண் திருடர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
"காலை 11 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்பார். 11:05-க்கு மணலை அள்ளுங்கள்" என்று ஒரு தியாகி 2021-ல் தேர்தல் வாக்குறுதி அளித்தார் அல்லவா? திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்த கனிமவளக் கொள்ளை மட்டும் தான்!
இந்த அவலத்தை செய்தி சேகரிக்க சென்றவரை அடிக்கும் தைரியம் மண் திருடர்களுக்கு எங்கிருந்து வந்தது? இதை, விடியா திமுக ஆட்சியாளர்கள் கொடுத்த தைரியம் என்று தானே சொல்ல வேண்டும்?
தன் பணியை செய்த செய்தியாளரை தாக்கிய மண் கொள்ளையர்களுக்கும், அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், செய்தியாளரைத் தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
2026-ல் தமிழ்நாட்டின் வளங்களைச் சுரண்டும் திமுக-விடம் இருந்து தமிழகத்தை மீட்போம்” என்று தெரிவித்துள்ளார்.