மதுரை பாரபத்தியில் நடைபெறும் தவெக 2வது மாநில மாநாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து வரும் அனைத்து வாகனங்கள் வலையங்குளம் சந்திப்பில் இருந்தே மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியும். இதனால் இப்பகுதி 2 நாட்களுக்கு முன்பு இருந்தே போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டுள்ளது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
படையெடுக்கும் தவெக தொண்டர்கள்
இந்த நிலையில் இப்பகுதியில் போக்குவரத்தை சீர்செய்ய மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரக தொட்டப்பநாயக்கனுர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் கருப்பசாமி மைக் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும், வாகனங்கள் இடைவெளி விட்டு வரவும், பொறுமையாக வரவும், எறும்புபோல வரிசையாகச் சாரை சாரையாக ஒருவர் பின் ஒருவராகச் செல்லாமல் ஓட்டுநர்கள் கவனமாக வரவும், நெருக்கமாகப் பகுதி என்பதால் மெதுவாக வரவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஆம்புலன்ஸில் செல்வது யாரோ செல்கிறார்கள் என நினைக்காமல் உங்களது சொந்தம் இரத்த உறவுகள் என நினையுங்கள். அம்புலன்ஸில் செல்லும் நேரம் கோல்டன் ஹவர்ஸ் ஆகையால் உயிர் காக்க உதவுங்கள் எனவும், மாநாட்டிற்கு வரும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்.
பெண் பவுன்சர்கள் வருகை
உங்களை நம்பி உங்களது குடும்பம் உள்ளது. மாநாடு பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். குடும்பத்தில் இளைஞர்கள் ஆணிவேர். உங்களை நம்பிக் குடும்பம் உள்ளது. மாதா, பிதா, குரு ஆகிய மூன்று பேரையும் மதிக்க வேண்டும் வாகனங்களில் வருபவர்கள் கத்தாமல் செல்ல வேண்டும். படியில் பயணம் செய்ய வேண்டாம்.படியில் பயணம் நொடியில் மரணம் என மாநாட்டிற்கு வரும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்.
தவெக மாநாட்டிற்காகப் பல்வேறு பகுதியிலிருந்து தொண்டர்கள் மாநாட்டு திடலை நோக்கி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவிலிருந்து விஜய்யின் பாதுகாப்பு நிகழ்ச்சிக்காக இரண்டு பேருந்துகளில் வரவழைக்கப்பட்ட பவுன்சர்கள் அவனியாபுரம் - பெருங்குடி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கினர். இன்று காலைப் பேருந்தில் மாநாடு திடலுக்கு வந்தனர். அங்குப் பெண்கள் பாதுகாப்பாக இருக்க போதிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டு திடலில் 2 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இலவச சுங்கக்கட்டணம்
மேலும் விஜய் ராம்ப் வாக் செல்லும் மீது பாதைமீது ஏறாமல் இருக்க போடப்பட்டுள்ள தடுப்புகம்பிகள் மீது கிரீஸ் தடவும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை தவெக மாநாடு நடைபெறும் திடலுக்குள் வரிசையாகத் தொண்டர்கள் படையெடுப்பதால் மாநாட்டு திடலில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் முன்வரிசையில் இருக்கைகள் பிடிக்கத் தவெக தொண்டர்கள் இரவு முதலே அங்கேயே காத்திருக்கின்றனர். பலர் இரவு அங்கேயே தூங்கினர். மேலும் மதுரைக்கு தவெகவினர் வருகையால் ரூம் வாடகை கட்டணம் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தவெக பெண் நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கைகளுக்கு அருகாமையிலே தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு வரும் தொண்டர்களுக்குச் சான்றிதழ் வழங்க க்யூஆர் கோடு ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள் எளிதாக வரும் வகையில் மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40,000 வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மாணவர்கள் அவதி?
மேலும் சாலைகளில் உள்ள தடுப்புகளை அகற்றி மாநாட்டு திடலுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவெக மாநாட்டால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெற உள்ள பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் காலையில் போதிய பேருந்து வசதி இல்லாமல் அவதி அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.