சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், ஆளும் கட்சி தொடங்கி, எதிர்க்கட்சிகள், புதிதாக தொடங்கப்பட்ட கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. ஸ்டாலின் தான் வராரு, விடியல நீட்டிக்கப்போறாரு என்று ஸ்டாலின் 2.0 வை வைத்து திமுக பணிகளை முடுக்கியுள்ள நிலையில், யாராவது எனக்கு வாழ்க்கை கொடுங்கள் என்று அதிமுக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பாஜக கூட்டணிக்கு அழைத்தாலும், ”நீ என்ன இன்னும் பைத்தியக்காரனாவே நினச்சிட்டு இருக்கலே” என்று அதிமுக மைண்ட் வாய்ஸ் எம்.ஜி.ஆர் மாளிகையை விட்டு வெளியே ஒலித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணிக்கு வாங்க, வராம போங்க, கூட்டணிக்கு கூப்பிடுங்க, கூப்பிடாம போங்க ஆன ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை நடத்தியே தீருவேன் இந்த எடப்பாடியார்.. என்று உட்கட்சியை பலப்படுத்தி, தலைமைக்கழகம், மாவட்ட நிர்வாகம் என அனைத்தையும் மறுசீரமைப்பு செய்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி திராவிட கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், “ஏ யார்ரா அந்த பையன், நான் தான் அந்த பையன்” என்று சிங்கிள்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார் தவெக தலைவர் விஜய். தொடக்கத்தில் சாஃப்டான பாயாக இருந்த விஜய், தேர்தல் நெருங்க நெருங்க ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கத் தொடங்கிவிட்டார். இதை பார்த்த மற்ற கட்சிகள் பீதியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், “முடிச்சி வுட்டிங்க போங்க” என்று தலைமைகள் தலையை பிய்த்துக் கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தவெக மாநாட்டிற்கு பிறகு, விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவிட வேண்டும் என்று எடப்பாடியார் இமாஜினேஷன் செய்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் அந்த இமாஜினேஷனை இம்மியளவும் விஜய் மதிக்கவில்லை என்றும் பனையூர் வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தகைய சூழலில், கூட்டணி தான் செட் ஆகல, தேர்தல் வியூகத்தையாவது சரியாக வகுப்போம் என்று ஆதவ் அர்ஜூனா மற்றும் பிரசாந்த் கிஷோரை இழுக்க எடப்பாடியார் எண்ணிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதுதான், “இருங்க பாய்” என்று யு டர்ன் போட்டு தவெகவிற்கு தாவினார் ஆதவ் அர்ஜூனா. தவெகவிற்கு சென்றதும் தனது ஆட்டத்தைத் தொடங்கிய ஆதவ், தற்போது பிரசாந்த் கிஷோரை விஜய்யுடன் மீட் செய்ய வைத்துள்ளது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
ஏற்கனவே பிரசாந்த் கிஷோருடன் அதிமுக 300 கோடி ரூபாய்க்கு டீலிங்கை முடிக்க இருந்ததாகவும், இந்த சூழலில் தவெக தலைவர் விஜயை பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதிமுகவிற்கு தேர்தல் வியூகங்களை வகுக்க பிரசாந்த் உறுதியளித்துவிட்டதாகவும், அதன் ஒருபங்காகத்தான் தவெக தலைவர் விஜய்யை பிரசாந்த் சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால் நிச்சயமாக வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பதாலும், திமுகவிற்கு இது நெருக்கடியை கட்டாயம் ஏற்படுத்தும் என்றும் பி.கே. பிளான் செய்து, ஆந்திரா மாடலை ரீகிரியேட் செய்யவே இந்த மீட் அப்பையே செய்துள்ளார் என்று ஐபேக் சோர்சர்ஸ் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விஜய்யை சந்தித்த அதே கையோடு, இரவோடு இரவாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம், பிரசாந்த் கிஷோர் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிமுகவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, அதிமுக – தவெகவை இணைக்கும் பி.கேவின் பிளான் வொர்க் அவுட்டாகுமா? அல்லது புஸ்ஸென்று போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.