எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளுக்குப்பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய துணைக்கண்டத்தில் மக்களுக்கு சேவையாற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற சிறந்த திட்டம் ஏதாவது மாநிலத்தில் உள்ளதா என அரசை குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப்போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல என மல்லை சத்யா அறிக்கை
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் தர 5 கிராம மக்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்க போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.
திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.
சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுகவினை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இன்று தங்களை இணைத்துக்கொண்டனர்.
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
பாமக நிறுவனர் ராமதாஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறைவதற்குள் பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த மே 16 ஆம் தேதி கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த போதே, நான் செத்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடைப்பெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.
”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
”த.வெ.க தலைவர் விஜய் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம். தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது விஜய்-க்கு நல்லது” என மதுரையில் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.