K U M U D A M   N E W S

அரசியல்

வழுக்கி விழுந்த வைகோ... காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் உள்ள குளியலறையில், வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் - தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தை அரசியல் செய்ய வேண்டாம் - அண்ணாமலை பேட்டி

காஷ்மீர் தாக்குதலில் அரசியலில் செய்ய வேண்டாம் என்றும், காஷ்மீர் தாக்குதலுக்கு அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

’தலீவரே தலீவரே தலீவரே..காசு எங்க தலீவரே?' செலவு செய்ய மறுக்கும் விஜய்? நிதி பற்றாகுறையில் தவிக்கும் தவெக?

தவெக தலைவர் விஜய் தேர்தல் பணிகளுக்காக செலவு செய்ய தயங்குவதால், அக்கட்சி நிதி பற்றாகுறையில் தவிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

’இரட்டை இலக்கு தாங்க..இல்லாக்காட்டி போங்க...’ - சீட்டுக்கு செட்டிங்..? காத்திருக்கும் காம்ரேட்கள்..! தலைவலியில் தலைமை?

தமிழக அரசியல் களத்தில் ’ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ என கொளுத்திப்போடப்பட்ட திரி அறிவாலயத்தில் புகையத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விசிக, காங்கிரஸை தொடர்ந்து காம்ரேட்களும் பல டிமாண்டுகளை திமுக தலைமையிடம் வைப்பதாக கூறப்படுகிறது. அந்த டிமாண்ட் என்ன? திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

தவெக கட்சி கொடியில் யானை சின்னம்- விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

த.வெ.க கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமகவை இழுக்கும் திமுக?.. தாமரையா? சூரியனா?.. சூடுபிடிக்கும் தைலாபுரம் மோதல்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாய் இருக்கும் தைலாபுரம் தந்தை-மகன் கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுப்பார்களா? அல்லது சூரியனை தேர்தெடுப்பார்களா? பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

துணைமுதல்வர் செல்வப்பெருந்தகை? போஸ்டரால் வந்த குழப்பம்..! ஷாக்கில் திமுக தலைமை..!

சென்னையில் ஆங்காங்கே தமிழக காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்காக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளாது. இந்த போஸ்டர் தான் இன்றைய தமிழ்நாடு அரசியல் களத்தின் ஹைலைட்டாக மாறியுள்ளது. அப்படி அந்த போஸ்டரில் இருந்தது என்ன? தமிழக காங்கிரஸ் போடும் தனி ரூட் என்ன? செல்வப்பெருந்தகை வைத்திருக்கும் விளக்கம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

ஸ்டாலினுக்கு எதிரான வேட்பாளர்.. பாஜகவின் பக்கா ஸ்கெட்ச்? இதுதான் சரியான போட்டி!

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பதவி பறிக்கப்பட்டாலும் அண்ணாமலையை வைத்து அதிரடி காட்ட டெல்லி பாஜக ஒரு திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அத்திட்டம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

அதிமுக, பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும் - த.மா.க தலைவர் ஜி.கே வாசன்

மாற்றம் உறுதி என மக்கள் தீர்மானித்து அதிமுக பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும் - த.மா.க தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை | TN Chief Election Officer

சென்னை தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

விஜய்யின் அரசியல் வருகை...டான்ஸ் மாஸ்டர் கலா கருத்து

விஜய்யின் அரசியல் வருகை நன்றாக உள்ளதாக கூறினார்.

திமுகவின் திகில் திட்டம்! கொந்தளிப்பில் கொங்கு? கதறும் கதர்கள்?

திமுகவின் புதிய திட்டத்தால் அதிர்ச்சி

பாமக முகுந்தனுக்கு என்னதான் ஆச்சு? பைசலாகாத பஞ்சாயத்து?

முகுந்தன் இளைஞர் அணித் தலைவராக அறிவிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்துவிட்டபோதும் கட்சிப் பணிகளில் தலைகாட்டாமல் இருப்பது மட்டுமின்றி, ஆண்டுதோறும் வெளியிடப்படும் பாமக நிழல்நிதி அறிக்கை வெளியீட்டிலும்கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

ஒற்றை தலைமையாகும் Sengottaiyan? ஒன்றிணையும் தலைகள்..! ஓரங்கட்டப்படும் Edappadi Palanisamy | ADMK

செங்கோட்டையன் தலைமையில் ஒற்றை தலைமையாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

TVK Vijay பின்னாடி போகும் இளைஞர்கள்.. எனக்கு தேவையே இல்லை - VCK Thirumavalavan Speech

விஜய் பின்னாடி போகும் இளைஞர்கள்...எனக்கு தேவையே இல்லை என திருமாவளவன் பேச்சு

சாதிவாரி கணக்கெடுப்பு.. நாதக பேரணிக்கு அனுமதிக்கொடுத்து ட்விஸ்ட் வைத்த நீதிமன்றம்..!

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு இனிவரும் காலங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்கான கட்டணத்தை  நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூபாய் குறியீடு மாற்றம்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு மாற்றம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலச்சினையில் 'ரூ' என்ற தமிழ்வார்த்தையை தமிழ்நாடு அரசு முன்னிலைப்படுத்தியிருக்கிறது. ரூபாய் குறியீட்டை மாற்றியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

TVK தலைவர் Vijay-க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? வெளியான புதிய தகவல்

மார்ச் 14ம் தேதி முதல் தமிழக வெற்றிக் KUMUDANகழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்

சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடலூர் மாவட்டத்தில் இரு கோவில்கள் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்வாகிகள் புகார் - நழுவி சென்ற Minister Anitha Radhakrishnan திமுகவினர் அதிருப்தி

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக புகார்

சமகல்வி எங்கள் உரிமை- கையெழுத்து இயக்கத்தில் அண்ணாமலை சூளுரை!

2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் நிகழ்ச்சியில் அடிதடி..! பறந்த நாற்காலிகள்... பதறிய மாஜி..! பின்னணியில் எடப்பாடியாரா..?

அதிமுகவில் கலகக் குரல் எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.