திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) விளம்பர மோகம் தலைக்கேறி விட்டதாகவும், தங்கள் நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே மக்கள் வரிப்பணத்தை வீணடித்துப் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாகவும் தமிழக பாஜக தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நிர்வாகத் தோல்விகள்:
தங்கள் நிர்வாகத் தோல்விகளை மறைக்க, மக்களின் வரிப்பணத்தை வெட்டியாக வாரி இறைத்து வண்ண விளம்பரங்களையும், திரைத்துறைப் பிரபலங்களையும் நிறைத்து பிரம்மாண்டமாக விழா எடுக்கிறது திமுக" என்று அவர் விமர்சித்துள்ளார்.
சத்துணவுத் திட்ட விமர்சனம்:
அரசு சத்துணவுத் திட்டத்தில் புழு பூச்சி நெளியும் குடிநீர், அழுகிப்போன முட்டைகள், பல்லி விழுந்த உணவு போன்ற சீர்கேடுகள் நடப்பதாகவும், ஆனால் அதை மறைத்துக்கொண்டு 'சாம்பாருக்கு சர்டிஃபிகேட்' வழங்குவது மடத்தனம் என்றும் கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் கேள்வி:
ஆளும் அரசின் சத்துணவுத் திட்டத்தைக் கண்டு அதிசயிக்கும் திமுக தலைவர்களும், பிரமுகர்களும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பார்களா அல்லது அங்கு வழங்கும் சத்துணவை ஒருவேளைக்காவது உண்பார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். "திமுக எனும் நாடகக் கம்பெனியின் நடிப்பு எல்லை கடந்து நம்மை எரிச்சலூட்டுகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் எச்சரிக்கை:
தேர்தல் சமயத்தில் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றலாம் என திமுக நினைப்பதாகவும், மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்கும் திமுக அரசின் அட்டூழியங்கள் ஆபத்தானவை என்றும் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் எனும் ஒரு போலி பிம்பத்திற்குள் அடைத்து தமிழகத்தை அழிவினை நோக்கி இழுக்க முயலும் திமுக அரசின் அத்தனை சதித்திட்டங்களும் வரும் சட்டமன்றத் தேர்தலில் முறியடிக்கப்படும்" என்று அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.