தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.15,000-ஐ கடந்தது!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.15,000-ஐ கடந்தது!
Gold Rate
வார தொடக்க நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சை கொடுத்தது. இந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நிலைக்கவில்லை. இன்று மீண்டும் தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய விலை நிலவரம்

கடந்த சனிக்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,050 விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.290-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950க்கும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2.90 லட்சத்திற்கும் விற்பனையா ஆனது.

தங்கம், வெள்ளி விலை உயர்வு

இன்றைய தினம் தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15.050-க்கு விற்பனை ஆகிறது.

இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.