அரசியல்

"2026-ல் விஜய் தான் முதல்வர்" - சொல்கிறார் செங்கோட்டையன்!

"2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராவது உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Sengottaiyan
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராவது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக பயணமும், விஜய் மீதான நம்பிக்கையும்

செங்கோட்டையன் தனது பேட்டியில், "அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகத்தில் இருந்து எம்ஜிஆர் வழியில் வெற்றிப் பயணத்தில் 3 முறை ஆட்சியில் அமர்ந்தார். அவர் என்னை அடையாளம் கண்டார். அதன் பிறகு கட்சி இரு கூறுகளாகப் பிரிந்த நேரத்தில் ஜெயலலிதாவுடன் உறுதுணையாக இருந்து பணிகளை ஆற்றினேன்.

"இன்றைக்கு மக்கள் சக்தியாக இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மக்கள் சக்தி மூலமாக அவருக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் 2026 இல் தமிழக முதல்வராவார். மக்கள் முழு மனதோடு அவரை ஏற்றுக்கொண்டு அரியணையில் அமர வைப்பார்கள். த.வெ.க.வுக்கு வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.

2026-ல் ஆட்சி மாற்றம்

தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு, நேர்மையான ஆட்சியை, புனிதமான ஆட்சியை உருவாக்குவதற்கு விஜய் புறப்பட்டிருக்கிறார். 2026 இல் தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் அமர்வார். மக்கள் சக்தி அவருக்காக ஒன்று சேர்ந்திருக்கிறது.

500 கோடி ரூபாய் வருவாயை தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காக, புனித ஆட்சியைக் கொண்டு வருவதற்காகத் துணிந்து இந்த இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார் விஜய். அதில் நானும் இணைந்திருக்கிறேன். யாரும் யார் படத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்ற அளவில் த.வெ.க.வில் ஜனநாயகம் உள்ளது" என்றார்.