பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில, மாவட்ட அணிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.
பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றினையுமா என்ற கேள்விக்கு, அது அவர்கள் கட்சி விவகாரம். அதை அதிமுக பொதுச்செயலாளரிடமே கேட்க வேண்டும்.
பதில் சொல்ல விரும்பவில்லை
என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, உள்துறை அமைச்சர் யாரை முதல்வராக அறிவிக்கிறாரோ, அதை ஏற்பதாக தெரிவித்திருந்தார். டிசம்பரில் அறிக்கப்படும் என கூறியிருந்தார். தற்போது அவர் கூட்டணியில் இருந்து விலகியது குறித்தான கருத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றார்.
மேலும் திமுகவை வீட்டிற்கு அனுப்புவது பாஜக, விஜய்யும் தான் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் தெரிவித்தது சரி தான். ஆனால் அவர் எப்படி சொன்னார்கள் என்பது தெரியவில்லை.
சுதேசி பொருட்கள் விற்பனை
அக்டோபர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக மேற்கொள்ள உள்ள யாத்திரை ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும். இதில் மக்களை சந்திக்க உள்ளனர். இந்த நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள்.
சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் கருத்திற்கு காங்கிரஸ் கட்சியின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, அமெரிக்கா, இந்தியா இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை அறிவிப்பாக பார்க்க வேண்டும். சாத்தியம் இல்லாததை கூறவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனை முதலில் சாத்தியம் இல்லை என்றார்கள். தற்போது சாமானியர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் சுதேசி பொருட்கள் விற்பனையும் உற்பத்தியை பெருக்கும் நோக்கம் சாத்தியப்படும்.
கூடுதலான வரிகளை குறைக்க பரிந்துரை
ஜிஎஸ்டி வரி விதிப்பில் அத்தியாவசிய விலைபொருட்கள் மீதான வரிகுறைப்பால் சாமானிய மக்களுக்கு பயனில்லை என்ற கேள்விக்கு, அனைத்து மாநில நிதியமைச்சர்களை கூடி ஆலோசித்தே ஜிஎஸ்டி வரிகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கூடுதலான வரிகளை குறைக்க பரிந்துரை செய்யப்படும்” என கூறினார்.