விளையாட்டு

பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!

“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!
பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்சிபி (RCB) வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம், தற்போது தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், “சின்னசாமி மைதானம் என்பது பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு ஏற்ற இடமாக இல்லை. அங்குள்ள பாதுகாப்பு வசதிகள், வெளியேறும் வழிகள், அவசரநிலை மேலாண்மை கட்டமைப்புகள் அனைத்தும் முறையாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்தன என்றும், நிகழ்ச்சியின் போதிய அனுமதி மற்றும் அளவுக்கேற்ப போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை சமர்பிக்கைப்பட்டதை தொடர்ந்து, அரசு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 11 பேர் உயிரிழப்பிற்கு நேரடியாகக் காரணமான பலரின் பெயர்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு தரப்பில் இந்த அறிக்கைக்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான விதிமுறைகள், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வர வாய்ப்பு உள்ளது.