உலகம்

இத்தாலியில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

இத்தாலியின் பிரெசியா நகரில் உள்ள சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 75 வயது விமானியும், அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், வாகன ஓட்டிகள் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு
இத்தாலியில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு
இத்தாலியின் பிரெசியா (Brescia) நகரில் நடந்த விமான விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரத்தின் ஒரு முக்கிய சாலையில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென விழுந்து தீப்பிடித்து நொறுங்கியதில், இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, 75 வயதான விமானி மற்றும் அவரது தோழி இருவர் மட்டுமே அந்த விமானத்தில் பயணித்துள்ளனர். இவர்கள் சிறிய ரக விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் விழுந்து தீப்பிடித்து எறியத்தொடங்கியுள்ளது.

விமானம் சாலையில் விழுந்த தீப்பிடித்த எரிந்த போது, சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களும் தீயில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

விபத்துக்குள்ளான ஃப்ரீசியா ஆர்ஜி விமானம் கார்பன் ஃபைபரால் ஆனது மற்றும் இதன் இறக்கைகள் சுமார் 30 அடி நீளம் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து சம்பவம் குறித்து தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இத்தாலியின் தேசிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் விசாரணைக்காக ஒரு ஆலோசகரை பிரெசியாவிற்கு அனுப்பியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தினை தொடர்ந்து அரசின் உயர்நிலை அதிகாரிகள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளன.