பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வரும் நிலையில், தூத்துக்குடியில் ரூ.452 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
மாலத்தீவில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில், இன்று இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பிரதமர் வருகிறார். அவருக்கு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதுதொடர்பாக நடைபெறும் விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். விழா முடிந்த பிறகு இரவு 9:30 மணிக்கு தனி விமானம் மூலம் பிரதமர் திருச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இரவு திருச்சியில் தனியார் விடுதியில் தங்கும் பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார். அங்கு நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழன் கங்கையை வெற்றி கொண்டதன் 1000வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டு சிறப்பிக்க உள்ளார். அங்கு, மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் 5 நாட்கள் நடைபெறும் நிலையில், 4-ஆம் நாள் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்கிறார்.
இதையடுத்து தஞ்சாவூர் சென்று 24 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக மாநில மையக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். பிரதமரின் வருகையைத் தொடர்ந்து திருச்சி, அரியலூர், தஞ்சையில் பல அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.