தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அறிவியல் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
10 தனிப்படைகள்
வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளியைக் கண்டறிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்திற்குரிய 15-க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
சிக்கியது எப்படி? அறிவியல் பூர்வ விசாரணை
இந்த வழக்கில் குற்றவாளியை அடையாளம் காணக் காவல்துறையினர் கையாண்ட அறிவியல் முறை முக்கியப் பங்காற்றியுள்ளது. சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரது கையில் நகக் கீறல்கள் இருந்ததை போலீஸார் கவனித்தனர். அதே வேளையில், உயிரிழந்த மாணவியின் நகங்களுக்குள் இருந்த சதைத் துணுக்குகளைச் சேகரித்து டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த முடிவுகள் முனீஸ்வரனின் மாதிரிகளுடன் கச்சிதமாகப் பொருந்தியதை அடுத்து, அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார்.
குற்றவாளியின் அதிர்ச்சி தரும் பின்னணி
கைது செய்யப்பட்டுள்ள முனீஸ்வரன் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு எட்டயபுரம் அருகே 65 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளியே வந்திருந்த நிலையில்தான், தற்போது மீண்டும் ஒரு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7