தமிழ்நாடு

ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த பெங்களூரு பெண்.. கம்மி எண்ணும் காதலன்!

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பழகி, இளம்பெண்ணைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய இளைஞரை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த பெங்களூரு பெண்.. கம்மி எண்ணும் காதலன்!
Chennai
பெங்களூருவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், அழகுக்கலை நிபுணராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2025-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தோழியின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றபோது, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அயூப் அக்ரம் (30) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.

கருச்சிதைவும் அம்பலமான உண்மையும்

தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக அக்ரம் அளித்த வாக்குறுதியை நம்பிய அந்தப் பெண், அவருடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். இதன் காரணமாக அந்தப் பெண் கர்ப்பமடைந்தார். அக்ரமின் ஆலோசனையின் பேரில் பெங்களூரு சென்ற அவருக்கு, அங்குத் திடீரென கருச்சிதைவு ஏற்பட்டது. இந்த வேதனையான சூழலில் அக்ரமிடம் பேசியபோதுதான், அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட அதிர்ச்சித் தகவல் அந்தப் பெண்ணிற்குத் தெரியவந்தது. மேலும், கர்ப்பத்தைக் கலைக்க அக்ரம் மாத்திரைகள் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கொலை மிரட்டல் மற்றும் போலீஸ் நடவடிக்கை

உண்மையை மறைத்துத் தன்னை ஏமாற்றியது குறித்து அக்ரமிடம் அப்பெண் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்ரம், அந்தப் பெண்ணைத் திருமணத்திற்கு வற்புறுத்தினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறையில் அடைப்பு

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அயூப் அக்ரமை தீவிரமாகத் தேடி வந்தனர். இறுதியில் அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே திருமணமான விபரத்தை மறைத்துக் காதலித்து ஏமாற்றிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.