தமிழ்நாடு

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதி செய்யப்பட்ட நபருக்கு 14 நாள் நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!
Vilathikulam Case
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மாணவி கொடூர கொலை

வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கடந்த மார்ச் 10-ஆம் தேதி காணாமல் போன நிலையில், மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி உறவினர்களும் கிராம மக்களும் தொடர் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.

தொடரும் விசாரணை

இந்த வழக்கில் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு அரசு மருத்துவமனையில் உடல் தகுதிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் தர்ம முனீஸ்வரன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, அவரை ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டுள்ளார்.