மத்திய கிழக்கு போர்ச் சூழலால் சர்வதேச அளவில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி கோரிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்குவதற்குத் தனது அரசு அனுமதி மறுத்துவிட்டதாக அதிபர் அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானங்கள், இம்மாதம் 4 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இலங்கையில் தரையிறங்க அனுமதி கோரியிருந்தன. ஆனால், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்த வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
நடுநிலைத்தன்மை மற்றும் சர்வதேச அழுத்தம்
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் திசாநாயக்க, பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், இலங்கை தனது நடுநிலைத்தன்மையைப் பேணுவதில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு போர்ச் சூழல் உலக நாடுகளுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தி வரும் நிலையில், எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகச் செயல்படாமல் நடுநிலையாக இருப்பதையே தனது அரசு விரும்புவதாகவும், இந்த நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பாதிப்புகளும் மீட்புப் பணிகளும்
அண்மையில் இந்தியாவிலிருந்து ஈரானுக்குச் சென்ற 'ஐரிஸ் தேனா' கப்பல் மீது இலங்கை கடல் பகுதிக்கு அருகில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 84 ஈரானியர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை இலங்கை அரசே முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது. போரின் தாக்கத்தால் இலங்கை தற்போது கடும் பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, எரிவாயு தட்டுப்பாட்டினால் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலைமுறை என்ற அதிரடி முடிவையும் அரசு அமல்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7