கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. ஏற்கெனவே தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியுள்ள நிலையில், ப்ளே-ஆப் செல்ல இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி இருந்தது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரஹானே, பாண்டே, ரஸல் ஆகியோரின் உதவியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது கொல்கத்தா அணி. 175 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய முடியாமல் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த சென்னை அணி இப்போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது.
சென்னை கொடுத்த பவர்-ப்ளே அதிர்ச்சி:
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சென்னை அணி, தொடக்கம் முதலே ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தது. ஆயூஸ் மாத்ரே, கான்வே ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேற, அறிமுக வீரர் யுர்வில் பட்டேல் அதிரடியாக விளையாடி வந்தார் மறுமுனையில். ஒருக்கட்டத்தில், பவர் ப்ளே முடிவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சென்னை அணி.
ப்ரேவிஸ், துபே இணை பொறுமையாக களத்தில் நின்று ரன்களை குவிக்கத் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய ப்ரேவிஸ் அரைச்சதம் கடந்தார். மறுமுனையில் துபே 45 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இறுதியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது சென்னை அணி. போட்டியின் முடிவு குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு-
”நாங்கள் மூன்றாவது ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். வெற்றி பெற்ற பக்கத்தில் இருப்பது நல்லது. சில விஷயங்கள் நாங்கள் நினைத்த வழியில் நடக்கவில்லை. என்ன தவறு நடந்துள்ளது என்பதை அடையாளம் காண்கிறோம். எங்களிடம் 25 வீரர்கள் உள்ளனர். அடுத்தாண்டு புதிய உத்வேகத்துடன் களம் திரும்புவோம்” என்றார்.
மேலும் ஓய்வு குறித்த கேள்விக்கு, “எனக்கு 43 வயது, நான் நீண்ட காலமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். இது எனது கடைசி ஐபிஎல் தொடரா? என்றால் இப்போது எனக்குத் தெரியாது. நான் வருடத்திற்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன் என்பது உண்மை. இந்த ஐபிஎல் முடிவடைந்த பின்னர் அடுத்த 6-8 மாதங்கள் என் உடல் என்ன மாதிரியான ஒத்துழைப்பை தருகிறது என்பதை பொறுத்துத்தான் ஓய்வு பெறுவது குறித்து கூற முடியும். இப்போதைக்கு அதுக்குறித்து முடிவு செய்ய எதுவும் இல்லை. செல்லும் இடங்களில் எல்லாம் எனக்கு கிடைக்கும் அன்பும், பாசமும் மெய்சிலிர்க்க வைக்கிறது” எனவும் தெரிவித்தார்.