சேலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் ராம் (26). இவர் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். திரைப்பட இயக்குனராக முயன்று வருவதாக தெரிகிறது. இவருக்கும் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஆடிட்டரான ஸ்ரீலட்சுமி(26) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இளம்பெண் சந்தேக மரணம்
கணேஷ் ராம் சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இவரது வீட்டிற்கு ஸ்ரீலட்சுமி வந்தார். மழை பெய்துக்கொண்டிருந்ததால் இருவரும் சேர்ந்து கோழிக்கறி சமைத்து விட்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனக்கு வாந்தி வர மாதிரி இருப்பதாக கூறி ஸ்ரீலட்சுமி கழிவறைக்கு செல்லும் வழியில் மயங்கி கீழே விழுந்தார். அதிர்ச்சியடைந்து கணேஷ் ராம் சென்று பார்த்தபோது வலது நெற்றியில் காயம் ஏற்பட்டு சுயநினைவின்றி கிடந்தார். உடனே அவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் பரிசோதனை செய்தபோது ஸ்ரீலட்சுமி இறந்து விட்டதாக கூறினர்.
போலீஸ் விசாரணை
இதற்கிடையில் தகவல் அறிந்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீலட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணேஷ் ராமை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே இது விபத்தில் ஏற்பட்ட மரணமா? வேறு ஏதேனும் காரணமா? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.