தமிழ்நாடு

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...ஆந்திர மாநில இளைஞர் கைது

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர மாநில இளைஞர் கைது

 ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...ஆந்திர மாநில இளைஞர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது
சேலம் மாவட்ட சேர்ந்த பெற்றோர்கள் தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு தங்களது குல தெய்வம் கோயிலுக்கு சென்று உள்ளனர். பின்னர் கோயிலுக்கு சென்று நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்த போது, ரயிலில் படுத்து உறங்கி வந்துள்ளனர்.

இளைஞர் கைது

அப்போது ஆந்திரா மாநிலம் பலமனேரி பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தூங்கி கொண்டு இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.இதனையெடுத்து அந்த சிறுமி கத்தி கூச்சலிடவே அந்த இளைஞரை ரயிலில் பயணம் செய்து பிடித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஓடும் ரயிலில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.