தமிழ்நாடு

திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரம்...மேட்ரிமோனி அலுவலக உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரத்தில் மேட்ரிமோனி அலுவலக உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரால் பரபரப்பு

 திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரம்...மேட்ரிமோனி அலுவலக உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
திருமணத்திற்கு பெண் பார்த்து தராததால் இளைஞரால் வெட்டப்பட்ட மேட்ரிமோனி அலுவலக உரிமையாளர்
திருமண சேவை மையம்

நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்த விஜயகுமார் (வயது 41). இவர் நெல்லை ஜங்ஷன் மீனாட்சி புரத்தில் திருமண தொடர்பு சேவை நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இவரிடம் திருமணத்திற்கு பொருத்தமான பெண்ணை பார்த்து தருமாறு பாளைமருதூர் பகுதியை சேர்ந்த ரத்தினவேல் என்ற இளைஞர் ஒருவர் பதிவு செய்து, அதற்கான பணத்தையும் வழங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், பல மாதங்கள் கடந்தும் அவரது திருமணம் நடைபெறாமல் இருந்ததால், கடும் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில், இன்று அந்த இளைஞர், விஜயகுமாரின் மேட்ரிமோனி அலுவலகத்திற்குள் புகுந்து, ஆத்திரத்தில் அரிவாளால் அவரது தலை மற்றும் காலில் சரமாரியாக வெட்டி உள்ளார். இதனால் பலத்த ரத்த காயமடைந்த விஜயகுமார் துடித்துடித்து அலறி உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இளைஞர் ரத்தினவேல் நேரடியாக காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.