தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கு - மே.28-ல் தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மே 28ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளிக்கிறார்.

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கு -  மே.28-ல் தீர்ப்பு!
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கு - மே.28-ல் தீர்ப்பு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் மே. 28ம் தேதி தீர்ப்பு அளிக்கிறது. இந்த வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் குறித்து போலீசார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு குற்றவழக்குகளில், ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு சாஸ்திரி நகர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலியை பறித்து, பொதுமக்கள் மீது சோடா பாட்டில்களை ஞானசேகரன் வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்கு, கடந்த 2014ம் ஆண்டு நந்தம்பாக்கம் பகுதியில் பார்த்திபன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவருடைய செல்போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், 2017ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நின்று, அங்கு வந்தவர்களை மிரட்டி செல்போன் பறித்தாக ஒரு வழக்கு, 2018 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மதுராந்தகத்தில் பைக் திருட்டு வழக்கு, 2019 ஆம் ஆண்டு கானத்தூர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து, வைர வளையல்கள், 71 சவரன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிய வழக்கு என ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தமாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளிக்கிறார், தொடர்ந்து இந்த வழக்கில் தொடர் விசாரணைக்கு பின்னர், ஐந்து மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.