ஆகஸ்ட் 30 அன்று சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், இன்று ஜெர்மனிக்குச் சென்றுள்ளார். அவருடன் தலைமைச் செயலாளர், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர்.
ஜெர்மனியில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். "வணக்கம் ஜெர்மனி. இங்கே உள்ள எனது தமிழ் குடும்பத்தினரின் பாசத்தால் தழுவப்பட்டு, தமிழ்நாட்டின் பலங்களை வெளிப்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் உறுதி செய்வோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு டிரில்லியன் டாலர் இலக்கு
தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவதே அரசின் இலக்கு. இதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். இது, 2021-ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு, அவர் மேற்கொள்ளும் ஐந்தாவது வெளிநாட்டுப் பயணம் ஆகும். முன்னதாக, துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல்வரின் ஜெர்மனி பயணத்திட்டம்
ஆகஸ்ட் 31: ஜெர்மனியில் நடைபெறும் "மாபெரும் தமிழ் கனவு 2025" நிகழ்ச்சியில் பங்கேற்று, ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்களைச் சந்திக்கிறார்.
செப்டம்பர் 1: ஜெர்மனியிலிருந்து லண்டன் புறப்படுகிறார்.
செப்டம்பர் 2: லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 3: லண்டனில் உள்ள தொழில் அதிபர்களைச் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார்.
செப்டம்பர் 4: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலகத் தமிழர் நல வாரியம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
செப்டம்பர் 6: லண்டனில் நடைபெறும் தமிழர் நல வாரிய நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
செப்டம்பர் 7:லண்டனிலிருந்து புறப்பட்டு, செப்டம்பர் 8 அன்று சென்னை திரும்புகிறார்.