கோயம்புத்தூரில் கடந்த மூன்று நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கும் மிரட்டல் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று நாட்களாகத் தொடரும் மிரட்டல்கள்
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இரண்டு டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட அதே நாளில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு "பாரதியார்" வரிகளைக் குறிப்பிட்டு மின்னஞ்சல்மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய சோதனையில் எந்த வெடிகுண்டும் கண்டறியப்படவில்லை. அடுத்த நாள், மாலை 4.45 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என மீண்டும் ஒரு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. அதுவும் புரளியெனத் தெரியவந்தது.
இதேபோல், நேற்று விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் கேந்திரா அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தியபோதும் எதுவும் கிடைக்கவில்லை.
நீதிமன்றத்திற்கும் மிரட்டல்
இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். எனினும், வழக்கம்போல் இம்முறைவும் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
புரளி மிரட்டல்கள்
மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் இணைந்து ஒவ்வொரு இடத்திலும் அலசி ஆராய்ந்து சோதனை நடத்தினர். ஆனால், வழக்கம்போல இதுவும் ஒரு 'ஃபால்ஸ் கால்' என்பது சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்தத் தொடர் வெடிகுண்டு புரளிகள் காவல் துறைக்கு ஒரு சேலஞ்சாக மாறியுள்ளதால், சைபர் கிரைம் போலீஸார் களத்தில் இறங்கி, இந்த மர்ம நபர்கள்குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தொடர்ச்சியான இந்த 'புரளி மிரட்டல்கள்' கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினருக்கு சவால் விடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வரும் இந்த மிரட்டல்கள் குறித்து, காவல்துறையினர் மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.