தமிழ்நாடு

தென்காசி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தென்காசி மாவட்டத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தென்காசி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!
தென்காசி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் இன்று காலை முதல் தொடர் சாரல் மழையானது பெய்து வரும் நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தென்காசி மாவட்டத்திற்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் நாளை சனிக்கிழமை மஞ்சள் அலார்ட் எச்சரிக்கையும், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஆரஞ்ச் அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலும், கனமழை பெய்யும் நேரத்தில் பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்க செல்வதையும் தவிர்க்க வேண்டும் எனவும், இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர் நிலைகளில் குளிப்பதையும் மரங்கள் மற்றும் உலக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும்

தொடர்ந்து மழை, வெள்ள நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது எனவும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மேலும், பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கவும் அவசர கால தேவைகளான டார்ச் லைட், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர காலங்களில் உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படக்கூடிய 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு 1077 மற்றும் 04633 -290548 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.