போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 22 ஆம் தேதி மது அருந்தச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் கைதான பிறகு அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிய ஆரம்பித்தன. இவர், சினிமாவில் தயாரிப்பாளரான பிறகு, திரைப்படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட போது சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல நடிகர்- நடிகைகள் தொடர்பு என்பது பிரசாத்திற்கு கிடைத்தது. அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் கைது செய்ய்யப்பட்டனர்.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தனித்தனியே சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். தன்மீது போடப்பட்ட வழக்கில், போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கிருஷ்ணா சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இருவருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி நிர்மல்குமார் அறிவித்தார்..