தமிழ்நாடு

காட்பாடியில் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மேத்தா கிரி பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது

 காட்பாடியில் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை

அமலாக்கத்துறை சோதனை

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர் கேன்டீன் உரிமையாளருமான மேத்தா கிரி ரெட்டி என்பவரது வீடு. இவரது வீட்டில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவருக்கு சொந்தமான காட்பாடி பாரதி நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் அதிகாலை சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சோதனையானது வருமான வரித்துறைக்கு சரியாக வருமான வரி செலுத்தாமல் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாகவும் அந்த பணத்தை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேகர் ரெட்டியின் உறவினர்

மேலும் அவரது அலுவலகத்தில் பயோமெட்ரிக் லாக் இருப்பதால் முழுவதுமாக சோதனை நடத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.இதன் காரணமாக அந்த அலுவலகத்தில் உரிமையாளரை வரவழைத்து சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

திடீரென வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மேதகிரியின் காரை சோதனை மேற்கொண்டனர். சாய் பாதம் ஹோட்டல் உரிமையாளர் மேத்தா கிரி இன்று காலையில் இருந்து தொடர்ந்து ஏழு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது.மேத்தா கிரி பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.