2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் சுற்றுப்பயணம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. அதேபோல் அதிமுக- பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நயினாருக்கு அழைப்பு
முதல் கட்டமாக ஜூலை 7ம் தேதி முதல் ஜூலை 21ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இபிஎஸ் சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்கி தஞ்சாவூரில் முடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ள சுற்றுப்பயண தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சூடிபிடித்த அரசியல் களம்
திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பிரசாரத்தையும், தவெக சார்பில் ஆகஸ்ட் 15ம் தேதி விஜய் தனது சுற்றுப்பயணத்தையும், அதிமுக சார்பில் இபிஎஸ் பிரசாரம் என மேற்கொள்ள உள்ளதால் தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் கட்சிகளின் சுற்றுப்பயணத்தால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.