ஆன்லைனில் ஆர்டர் செய்து சீன நூடுல்ஸ் சாப்பிட்ட திருச்சியை சேர்ந்த சிறுமி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தேனி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர், பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, காலாவதியான குழந்தைகள் சாப்பிடும் சிப்ஸ் பாக்கெட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டு, அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அழித்தனர். மற்றொரு கடையில் பட்டாசுகளுடன் உணவுப்பொருட்களும் விற்பனைக்காக வைத்திருந்ததை அடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
பின்னர் அருகாமையில் இருந்த ஆவின் விற்பனை நிலயத்தில் காலாவதியான குளிர்பானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவைகள் கொட்டி அழிக்கப்பட்டன.