விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதற்காக, நகரின் முக்கியப் பகுதிகளில் 16,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மூன்று கூடுதல் ஆணையர்களின் தலைமையில், சிறப்புப் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய நான்கு இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு இடங்களிலும் காவல் உதவி ஆய்வு மையங்கள் மற்றும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள்
பட்டினப்பாக்கம் கடற்கரையில் மட்டும் மொத்தம் 1,062 சிலைகள் கரைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலைகளை எளிதாகக் கரைப்பதற்காக, ராட்சத கிரேன்கள் மற்றும் கன்வேயர் பெல்ட் போன்ற நவீன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளைத் துல்லியமாகச் செயல்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஐஸ் ஹவுஸ் பகுதியில் நடைபெறும் ஊர்வலத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.