தமிழ்நாடு

மதுரையில் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அச்சம்!

heavyrain,madurai,மதுரை,கோடைமழை,வானிலை,Motorists are scared,due to water flowing on the road

மதுரையில் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அச்சம்!
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அச்சம்!
தமிழகத்தில் கோடை பருவமழை முன்னதாகவே தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் முதல் இன்று வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழையும்., ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இன்று காலை முதலே மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்ததால் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மதுரை மாநகர் பகுதியான கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், தத்தனேரி, அண்ணா பேருந்து நிலையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், காளவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்., புறநகர் பகுதிகளான மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான், நாகமலை புதுக்கோட்டை, சிலைமான், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது.

இந்த கனமழையால் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும்., வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். தொடர்ந்து., மாநகரின் ஒரு சில இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களில் மனநிலை சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஒட்டிகள் சாலையில் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். சுரங்கப்பாதைகள் ஆற்று ஓரம் சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.