தமிழ்நாடு

தென்காசியில் தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் குளிக்க தடை!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை பெய்துவரும் நிலையில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்காசியில் தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் குளிக்க தடை!
தென்காசியில் தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் குளிக்க தடை!
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் தொடர் சாரல் மழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தென்காசி மாவட்டத்திற்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில் தென்காசி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும்

மேலும், கனமழை பெய்யும் நேரத்தில் பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்க செல்வதையும் தவிர்க்க வேண்டும் எனவும், இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர் நிலைகளில் குளிப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் நேற்று இரவு முதல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது, இதனால் வார விடுமுறை தினமான இன்று குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் இடுவதற்காக வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, ஐந்தருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமையவே தற்போது அணைத்து சுற்றுலா பயணிகளும் ஐந்தருவி நோக்கி படையெடுத்து செல்கின்றனர் மேலும் வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கையின்படி இந்த தடை நீங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், நேற்று மெயின் அருவியிலும் ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு பின்னர் மெயின் அருவியில் இரவு முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது .

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அருவிகளுக்கு வரும் நீர் வரத்தானது அதிகரிக்க தொடங்கியுள்ள காரணத்தினாலேயே குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் நீரின் வரத்து குறைந்ததும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு என்று காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.