உண்டியல் பணம்
கிருஷ்ணகிரி அருகே பள்ளேரிப்பள்ளியில் வசித்து வருபவர் லக்ஷ்மிபத்தி பிரஷாந்தி தம்பதி. இவர்களுக்கு தேஜஸ்பதி மற்றும் ஆதித்யாபதி என இரு மகன்கள் உள்ளனர்.தினமும் தங்கள் பிள்ளைகளுக்கு திண்படங்களுக்காக வழங்கும் சில்லறை காசுகளை இரு பிள்ளைகளும் உண்டியல் மூலம் சிறுக, சிறுக சேர்த்து வைத்து வந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா பழி தீர்க்கும் விதமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தாங்கள் சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணத்தை நமது இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்த சிறுவர்கள் தன் தாயுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உண்டியலுடன் வந்தனர்.
ராணுவத்திற்கு வழங்கிய சிறுவர்கள்
பின்னர் இரு சிறுவர்களும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாரை சந்தித்து இந்திய ராணுவத்திற்கு தாங்கள் சேர்த்து வைத்த பணத்தை உண்டியலுடன் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். பின்னர் சிறுவர்களிடம் இருந்து உண்டியலை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இந்த சின்ன வயதில் நாட்டிற்காக உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த சிறுவர்களின் செயலை பாராட்டி இனிப்புகள் வழங்கினார்.
தாங்கள் சிறுக, சிறுக சேர்த்து வைத்த உண்டியல் சேமிப்பை இந்திய ராணுவத்திற்கு நிதி வழங்க உண்டியளுடன் வந்த சிறுவர்களின் செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.