தமிழ்நாடு

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற உறவினர்கள்..கைது செய்த காவல்துறை

உயிரிழந்த பள்ளி மாணவனின் உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காவலர்களுக்கும், உறவினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  பள்ளி மாணவன் மர்ம மரணம்: கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற உறவினர்கள்..கைது செய்த காவல்துறை
பள்ளி மாணவன் மர்ம மரணம் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்க உறவினர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச்சேர்ந்த சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி 11ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவன் மர்ம மரணம்

இந்த நிலையில் மாணவன் கடந்த 1ம் தேதி காணாமல் போனதாகப் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கூறிய நிலையில், அதிர்ந்து போன பெற்றோர்கள் எனது மகனைக் காணவில்லையெனத் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் இரண்டு நாட்களாகத் தனிப்படை அமைத்துப் போலீசார் தேடி வந்த நிலையில், அதே பள்ளியில் உள்ள மூடப்பட்டிருந்த கிணற்றில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை அறிந்த பெற்றோர்கள் கத்தி கதறி அழுதனர். மேலும் சாலை மறியல், காவல் நிலையம் முற்றுகை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முற்றுகையெனப் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

கடும் வாக்குவாதம்

இதைத்தொடர்ந்து, தவறு ஏதேனும் நடந்திருப்பேன் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்களிடம் போலீசார் கூறியதன் அடிப்படையில் முகிலனின் உடல் கடந்த 5ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் அதிலிருந்து இதுவரை பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் மற்றும் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வரும்போது போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகிகளும் முன்பு தடுத்து நிறுத்தினர்.

உறவினர்கள் கைது

இதன் காரணமாகப் போலீசாருக்கும், உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.