மீனவர்களை வரவேற்றபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முழுவதும் உள்ள கடற்கரை கிராமங்களில் இருந்தும் மீன் பிடிக்க பல்வேறு நாடுகளுக்கு சென்று இருந்தார்கள். அதே போல், ஈரான் நாட்டிற்கு மின் பிடிக்க சிவகங்கை, உவரி பகுதியை சேர்ந்த 15 மீனவர்கள் சென்ற நிலையில், அங்கு போர் பதற்றம் உருவானது. இதனால் சொந்த ஊருக்கு வர வேண்டும் என ஆசைப்பட்டனர்.
இது பற்றி என்னிடம் தகவல் வ்ந்ததும் வெளியுறவு துறை அமைச்சரிடம் பேசி, ஈரானில் உள்ள தீவுக்கு ஆட்களை அனுப்பி உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அதேப்போல், மற்றொரு தீவில் உவரியை சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். அவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து நேரடியாக விமானம் முலம் வரமுடியாததால் கப்பலில் துபாய் வந்தனர். அங்கிருந்து விமானம் முலம் டெல்லி வழியாக சென்னை வந்து உள்ளனர். இதற்காக பிரதமர் மோடிக்கும், வெளியுறவு துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மீன்பிடிக்க சென்ற இடத்தில் போர் பதற்றம் காரணமாக தொழிலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் சொந்த ஊருக்கு திரும்ப தமிழக பா.ஜ.க. செலவில் அழைத்து வரப்பட்டு உள்ளனர். மற்றொரு தீவில் உள்ளவர்களை விரைவில் அழைத்து வரப்படுவார்கள்.
விஜய் கூட்டணிக்கு வர விருப்பம் இல்லை என தெரிகிறது. எங்களுடைய கொள்கை தமிழ்நாட்டில் திமுக இருக்க கூடாது. விஜய் கொள்கையும் அது தான். இதில் எல்லாரும் சேர்ந்து இருந்ததால் தான் நல்ல இருக்கும் என்று ஒரு கருத்தை சொன்னேன். இப்போது விஜய் கருத்தில் மாறுபாடு இருக்கிறது. விஜய் தனியாக நிற்க முடிவு செய்து கருத்து சொல்லி உள்ளார். அந்த கருத்திற்கு பதில் சொல்ல முடியாது என்று கூறினார்.
பா.ஜ.க. வின் பி டீம் என்பது ஆளுங்கட்சியின் பிரச்சாரம் தான். திமுகவிற்கு பா.ஜ.க.வை பார்த்தாலே பயம். 4 ஆண்டுகளாக பேசாமல் இருந்தவர்கள் அதிமுகவுடன் கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்து விட்டது என்றதும் அன்றில் இருந்து திமுகவினர் பதற்றத்தில் இருக்கிறார்கள். அந்த பதற்றத்தின் வெளிபாடு தான் பி டீம் என்பார்கள். விஜய் இல்லை என்றதும் விட்டு விட்டார்கள். கமல்ஹாசனை சொன்னார்கள். தற்போது திமுக அணியில் உள்ளார். திமுக அணியில் நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார். திமுக் வேண்டாத பிரச்சாரத்தை எடுத்து உள்ளது. விஜய் தனது விருப்பத்தை சொல்லி உள்ளார். தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உவரியை சேர்ந்த அஜித் பேசுகையில், ஈரானிற்கு எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மீன்பிடிக்கசென்றனர். போர் பதற்றம் காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டார்கள். பா.ஜ.க. தலைவர் நைனார் நாகேந்திரனிடம் தகவல் சொன்னோம். பா.ஜ.க. செலவில் அழைத்து வரப்பட்டு உள்ளனர். எனறார்.
உவரியை சேர்ந்த மீனவர் ஆண்டோ கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானிற்கு மீன்பிடிக்க சென்றோம். இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக தொழிலுக்கு போக முடியாமல் 2 மாதமாக இருந்தோம். கடந்த ஜுன் மாதம் 13ந் தேதி முதல் வர முடியாமல் தவித்தோம். உணவு, தங்கும் வசதிகள் செய்து தந்தார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எங்களுடன் சென்ற 15 பேரும் வந்து விட்டனர். மற்றொரு தீவில் உள்ள 15 பேர் கரை வருவதற்கு கஷ்டமாக உள்ள்து என கூறினார்.
திருநெல்வேலியை சேர்ந்த மீனவர் மணி கூறுகையில், போர் நடக்கும் மிகுந்த பதற்றமாக இருந்தது. ஜிபிஎஸ் கருவி முலமாக தான் மீன் பிடிக்க செல்ல வேண்டும். ஆனால் எங்களுக்கு தரவில்லை. படகு உரிமையாளர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. கப்பல் முலமாக தான் வந்துள்ளோம். ஜுன்13ம் தேதியில் படகில் தான் இருந்தோம். எங்களை மீட்க யாரும் இல்லை. நயினார் நாகேந்திரனிடம் சொல்லி ஒரு வாரத்தில் மீட்டு வந்து உள்ளனர். சம்பளம் எதுவும் இல்லை. தொழிலுக்கு போக முடியவில்லை. வீட்டிற்கு சென்று மனைவி, குழந்தைகளை சந்தித்தால் தான் பத்ற்றமான மன நிலையே மாறும். கடவுள் போல் காப்பாற்றி அழைத்து உள்ளனர் என கூறினார்