தமிழ்நாடு

ராமதாஸ் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்வார் எனப் பொதுக்குழுவில் தீர்மானம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமகவின் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்ந்து செயல்படுவாரென ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராமதாஸ் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்வார் எனப் பொதுக்குழுவில் தீர்மானம்!
ராமதாஸ் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்வார் எனப் பொதுக்குழுவில் தீர்மானம்!
விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் சங்கமித்ரா திருமண நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம், கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கோலாகலமாகத் தொடங்கியது. தனது தைலாபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்ட ராமதாஸ், பொதுக்குழு கூட்டத்தில் மூத்த மகள் காந்திமதி, பேரன் முகுந்தன் ஆகியோருடன் மேடையில் பங்கேற்றார். மேலும், இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 4,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கட்சி செயல்பட்டு வரும் நிலையில், நிறுவனர் ராமதாஸுக்கும், அவருக்குமான சில கருத்து வேறுபாடுகள்குறித்த செய்திகள் வெளியான பின்பு இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தத் தீர்மானம், கட்சியில் ராமதாஸின் முடிவுகளே இறுதி என்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சி மற்றும் சமூகப் பிரச்சினைகள்குறித்து மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:


* கட்சியை வலுப்படுத்துவதற்காக நிறுவனராக இருந்த சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா ராமதாஸ் கட்சி அமைப்பு விதி 13 திருத்தங்களின்படி கட்சியின் தலைவராக நிர்வாகக் குழு மற்றும் செயற்க்குழு ஆகியவற்றின் முடிவின்படி 30.05.20025 முதல் செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவர் அய்யா அவர்கள் பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் ஆகச் செயல்படுவார் என்பதை 17.08.2025 இன்றைய மாநில சிறப்பு பொதுக்குழு ஒருமனதாக அங்கீகரிக்கிறது.

* வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிக இடங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற உரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வெற்றிக் கூட்டணியை உருவாக்க மருத்துவர் அய்யா ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

* வன்னியர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீடு மருத்துவர் அய்யா அவர்களின் தீவிர முயற்சியால் கடந்த ஆட்சி காலத்தில் சட்டமாக்கப்பட்டு, தற்பொழுது நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. ஏமாற்றத்தையும், அளித்து மிகுந்த வேதனையையும் உருவாக்கி உள்ளதால் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் மீண்டும் போராடி உறுதியாகப் பெறுவோம்.


* தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டு அளவை உறுதி செய்ய ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் தட்டிக் கழித்து வருவது கண்டனத்துக்குரியது. சில மாநிலங்களில் நடத்தியது போல உடனே ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

* தமிழ்நாட்டில் மது விற்பனையால் இளைஞர்கள் முதல் முதியவர்கள்வரை குடிகாரர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து குடும்ப பொருளாதாரம், குழந்தைகள் கல்வியும் பாதித்து. பெண்கள் தற்கொலை உயிரிழப்புகள் அதிகரிப்பதோடு கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டின் மக்களைக் காக்க மதுவை ஒழிக்க முழு மதுவிலக்கு (பூரண மதுவிலக்கு) நடைமுறைப்படுத்த வேண்டும்

* தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்வதால் மாணவர்கள். இளைஞர்கள் எனப் பாதிக்கப்படுவோர் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. போதைப் பொருள் ஒழிப்பை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிப் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்.


* பூம்புகாரில் 10.08.2025 மகளிர் பெருவிழா மாநாட்டிற்கு உழைத்தவர்களுக்கும், கலந்து கொண்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சக்திமிக்க சகோதரிகளுக்கும், அனுமதி பாதுகாப்பு வழங்கியவர்களுக்கும், கலை குழுவினருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...!

* "நீரின்றி அமையாது உலகு" என்பதற்கிணங்க மழைக்காலங்களில் காவிரி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் உபரி நீர் நூற்றுக்கணக்கான TMC அளவுக்குக் கடனுக்கு வீணாகச் செல்கிறது. இதைத் தடுத்து முறையாகப் பயன்படுத்தக் காவிரி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

* தர்மபுரி பின்தங்கிய மழையளவு குறைந்த, வளமற்ற மாவட்டத்தின் வாழ்வாதார வளர்ச்சிக்கு ஒகேனக்கல் பகுதியிலிருந்து நீரேற்று மூலம் தர்மபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

* தமிழ்நாடு நீர் ஆதாரத்தில் கடைமடை மாநிலமாகவும், மழையற்ற காலத்தில் வறட்சி மாநிலமாகவும் மாறிக் குடிநீர் பஞ்சமும், பாசனமும் அற்ற மாநிலமாகவும் அடிக்கடி உருவாகிறது. இதைப் போக்க காவிரி -கோதாவரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்

* 5 தென் மாவட்டங்களின் நீர் ஆதாரத்திற்கு குடிநீர் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயரத்தை 152 அடி அடியாக உயர்த்த வேண்டும்.

* விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் கனவுத் திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

* விவசாய உற்பத்தி பொருளுக்குக் கட்டுபடியான விலை இல்லாமல் விவசாயிகளின் நலிந்த நிலையே நீடித்து வருவதால் விலை நிர்ணயம் வேண்டும்.

* தமிழ்நாட்டு மீனவர்கள் தண்ணீரில் மிதந்து.தண்ணீரோடு வாழ்ந்து குடும்ப பொருளா--தாரமே முன்னேற்றம் இல்லை. மீனவர்களின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.

* இந்தியாவில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கப்-பட்டுள்ளது. மீண்டும் திரும்பப் பெற வேண்டும்.

* நெய்வேலி NL.C நிர்வாகம் விலை நிலங்களைக் கையகப்படுத்துவதை கைவிட்டு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

* புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். புதுச்சேரியில் நிர்வாக வசதிக்காகவும், வளர்ச்சி திட்டங்களுக்காகவும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

* அரசு தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி,கல்லூரி கல்வி, ஆகியவற்றில் ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளதால் மாணவச் செல்வங்களின் கல்வி நலன் கருதி நியமன தேர்வில் வெற்றி பெற்றவர்களை உள்ளடக்கி உடனடியாக நிரப்ப வேண்டும்.

* குற்றமில்லாத, நல்லொழுக்கமுள்ள, வாழ்வியல் நெறியோடு வாழும் மனித சமுதாயத்--தை உருவாக்க உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நீதி போதனை வகுப்புகள் உரு--வாக்கப்பட வேண்டும்.

* கர்நாடக மாநில அரசு காவிரியின் குறிக்க மேகேதாட் பகுதியில் அணைக்கட்டும் தொடர் முயற்சியைக் கட்டுப்படுத்த தக்க நடவடிக்கை தேவை.

* தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் வட மாவட்டங்கள் பின்தங்கி இருப்பதை நீண்ட காலமாக 10 மற்றும் +2 வகுப்பு தேர்ச்சி விகிதமே அடையாளமாக உள்ளதை போக்க பின்தங்கிய மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்கு அரசுச் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

* சுங்கச்சாவடி கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டு, பொதுமக்களுக்குப் பெரும் சுமையாக உள்ளதால் சுங்க கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களில் வட மாநிலங்களைச் சார்ந்த இந்தி பேசுபவர்களே பணியில் உள்ளதால், பயணிகளுக்கு மொழி புரியாமல் திண்டாடும் நிலையில் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கேயும் பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களையே பணியமர்த்த வேண்டும்.

* நீட் தேர்வு அச்சத்தால் மாணவ, மாணவிகளின் தற்கொலை உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு விலக்களிக்க வேண்டும்.

தமிழ்நாடு குடிசை வீடுகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்பட வேண்டும்.கிராமங்களில் ஏழை, எளிய மக்களின் விடுபட்ட அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித் தர வேண்டும்.

* இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை மறுக்கப்பட்டு தமிழ்நாடு உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வரும் நிலையில் 50 ஆண்டுகளாகப் போராட்டம் முடிந்த நிலையிலும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடுவன் அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

* பாட்டாளி மக்கள் கட்சியினர் அனைவருக்கும் உடனடியாகப் புதிய உறுப்பினர் அட்டைவழங்கப்படும். பாட்டாளி மக்கள் கட்சியில் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் கட்சியில் உள்ள அனைவருக்கும் உடனடியாகப் புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.

* அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பணப்பயன் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்.

* தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் நீண்ட காலமாகப் பணி புரிந்து வரும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

* எல்லாவற்றிலும் சாதனை படைக்கும் இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்வதே நாட்டின் வளர்ச்சி.உயர்கல்வி வரை படித்தும் திறன் மிக்க இளைஞர்கள், இளம் பெண்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையில், வாழ்வாதாரத்திற்கும் வளர்ச்--சிக்கு வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும்.

* பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதி -35 உருவாக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ தேர்தலை எதிர்கொள்ளக் கட்சியினுடைய நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

* காவிரி பாசன (டெல்டா) மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட வேண்--டும். நெல்லுக்கு கூடுதல் விளையும், நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகப்படுத்தி, மழைக்காலங்க-ளில் நெல் முட்டைகளைப் பாதுகாக்க நெல் கிடங்குகள் அமைக்க வேண்டும்.

* செஞ்சிக்கோட்டையின் பெயர் வரலாற்றுப் பிழையாக இடம் பெற்றுள்ளதால் அதை மாற்றிச் செஞ்சியர் கோன் காடவன் கோட்டை என்ற உண்மை தகவல் இடம் பெற மத்திய மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.