சென்னை சைதாப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சைதாப்பேட்டை சுரங்கப்பாதை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர்.
இளைஞர் கைது
சோதனையில் 3 கிலோ கஞ்சா மற்றும் 104 போதை மாத்திரைகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்த போது சைதாப்பேட்டையைச் சேர்ந்த திவாகர் என்பது தெரிந்தது.
இவர் டாட்டூ போடும் தொழில் செய்து வருகிறார். கஞ்சாவை ஆந்திராவில் இருந்தும் மாத்திரைகளை பெங்களூருவில் இருந்தும் வாங்கி வந்ததாக தெரியவந்தது. டாட்டூ போட வருபவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.