தமிழ்நாடு

"ஷப்பா.. இப்பவே கண்ண கட்டுதே.." நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது.


Gold Rate
சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. நாள்தோறும் மாற்றி அமைக்கப்படும் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஈரான், அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலை ஏற்றம், இறக்கமாக கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது.

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1600 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000 விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ,14,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிலோவிற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் ஆயிரம் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,000 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.125 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ,14,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.