தமிழ்நாடு

முதலமைச்சருக்காக நாங்கள் காத்திருக்க வேண்டுமா? – பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம்!

முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்தில் காக்க வைத்ததால் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

முதலமைச்சருக்காக நாங்கள் காத்திருக்க வேண்டுமா? – பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம்!
முதலமைச்சருக்காக நாங்கள் காத்திருக்க வேண்டுமா? – பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம்!
முதலமைச்சர் மட்டும்தான் சாலையில் செல்ல வேண்டுமா? நாங்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்தவர்தானே முதலமைச்சர் செல்வதற்காக, நீண்ட நேரம் காத்திருக்கிறோம் பேருந்துக்கு வழி விடுங்கள் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராணி மேரி கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கல்லூரி விடுதியை திறந்து வைத்த பிறகு அங்கிருந்து தலைமைச் செயலகம் செல்லும் முதலமைச்சரின் கான்வாய் வாகனத்திற்கு வழி ஏற்படுத்துவதற்காக நீண்ட நேரத்திற்கு முன்பே பட்டினப்பாக்கம் சாந்தோம் சாலையில் இருந்து மெரினா கடற்கரை, காமராஜர் சாலை வழியாக பாரிமுனை செல்லும் அனைத்து பேருந்துகளும் டிஜிபி அலுவலக சிக்னல் சந்திப்பில் போலீசாரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், முதலமைச்சரின் கான்வாய் வாகனம் ராணி மேரி கல்லூரியில் இருந்து புறப்பட தாமதமானதால் நீண்ட நேரம் டிஜிபி அலுவலக சிக்னல் சந்திப்பில் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்தும் காக்க வைக்கப்பட்டு இருந்தது நீண்ட நேரம் ஆனதால் அலுவலகங்கம் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியவர்களும் பேருந்திலேயே காக்க வைக்கப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்ததால் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பெண்கள் முதலமச்சரை நாங்கள்தானே ஓட்டு போட்டு  தேர்ந்தெடுத்தோம் நாங்கள் சென்ற பிறகு முதலமைச்சர் சென்றால் என்ன என்று கேள்வி எழுப்பி  சாலையில் போராட முயற்சித்தனர் போலீசார் அவர்களை சமதானப்படுத்தியதையடுத்து அவர்கள் மீண்டும் பேருந்தில் ஏறினர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அடையார் சாலையில் முதலமைச்சர் கான்வாய் வாகனத்தால், நீதிபதிகள் உயர்நீதிமன்றத்திற்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் போக்குவரத்தில் சிக்கி தவித்தனர் முதலமைச்சர் வாகனங்களுடன் ஏன் இத்தனை வாகனங்கள் செல்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், தொடர்ந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என கண்டனம் தெரிவித்திருந்தது. அதன் பிறகு கான்வாய் வாகனத்தின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டது. முதலமைச்சரும் மக்களோடு மக்களாக பயணம் மேற்கொண்டார். ஆனால், அவ்வப்போது மக்களை சாலையில் மறித்து முதலமைச்சர் வாகனம் செல்வது அவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.