வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் (23), பெயிண்டராக வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊசூர் நோக்கி சென்றுள்ளார்.
இளைஞர் உயிரிழப்பு
அப்போது சின்ன தெள்ளூர் அருகே அணைக்கட்டில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அடையாம் தெரியாத (டாடா ஏஸ், சின்ன யானை) வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்கு மோதிய விபத்தில் அருண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் ஓட்டுநர் வாகனத்துடன் தப்பிச்சென்றுள்ளார்.
கடந்த 25 -ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணைக்கட்டு வந்து சென்ற போது, தற்போது விபத்து ஏற்பட்ட சாலையில் போடப்பட்டிருந்த வேகத்தடை அகற்றப்பட்டதாகவும், அது மீண்டும் போடாததாலேயே விபத்து ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்ததாக கூறி பொது மக்கள் வேலூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டம்
தகவலறிந்து வந்த அரியூர் காவல் துறையினர் பெது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
மேலும் உயிரிழந்த அருண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் விபத்து குறித்து வழக்குபதிவு செய்த அரியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.