தமிழ்நாடு

கால்வாய் அமைக்கும் பணியினால் ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி!

நாகர்கோவில் அருகே தண்டவாளத்தின் அடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் ரயில்கள் தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்ததால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.

கால்வாய் அமைக்கும் பணியினால் ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி!
கால்வாய் அமைக்கும் பணியினால் ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழையாறு பகுதியில் தண்டவாளத்தின் அருகில் கால்வாய் அமைக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது காலை 5 மணிக்கு முடிய வேண்டிய பணி ஒரு மணி நேரம் தாமதமாக முடிந்ததால் நாகர்கோவில் வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்,கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் அங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் இயக்கப்பட்டது. கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 4:40 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்து சேரும். ஆனால் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக 5:45 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 4.45 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். ஆனால் இன்று ஒன்றுரை மணி நேரம் தாமதமாக 6.25 மணிக்கு நாகர்கோவில் வந்தடைந்தது. தாம்பரம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 6.45மணிக்கு பதிலாக 7.45 மணிக்கு வந்தது.

பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் அரை மணி நேரம் தாமதமாக, நாகர்கோவில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. மதுரையிலிருந்து டவுன் ரயில் வழியாக புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக தாமதமாக இயக்கப்பட்டதால், ரயில் பணிகள் பணி தவிப்பிற்கு ஆளானார்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு தாமதமானதால் இன்று ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதும் ஒரு சில ரயில் பயணிகள்வள்ளியூர், ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்திலிருந்து இறங்கி பஸ்கள் மூலமாக நாகர்கோவிலுக்கு வந்தனர்.

தொடர்ந்து, இதுபோன்ற பணிகள் நடைபெற்று வருவதால், பயணிகள் பெரும் அவதிகுள்ளாகிவருவதால், கால்வாய் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.