சென்னை அயனாவரம் வீராசாமி தெரு பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவன் அருள்மொழி வர்மன். இவரது நண்பர் அபினேஷ் மற்றும் அப்துல்லா. இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். அயனாவரம் வீராசாமி முதல் தெருவில் உள்ள அருள்மொழி வர்மன் வீட்டில் நண்பர்கள் மூன்று பேரும் இருந்தனர். திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அருள்மொழி வர்மன், அபினேஷ், அப்துல்லா ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.
அரிவாளால் வெட்டியவருக்கு மாவுக்கட்டு
மூன்று பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூன்று பேரும் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அயனாவரம் வீராசாமி இரண்டாவது தெருவை சேர்ந்த சூர்யா என்ற முட்டை சூர்யா, அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற சிலம்பு, அண்ணா நகரைச் சேர்ந்த பல்லு கார்த்திக் மற்றும் ஒருவர் என நான்கு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சூர்யா, சிலம்பரசன், பல்லு கார்த்திக் ஆகிய மூன்று பேரும் அயனாவரம் பால் டிப்போ அருகே இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்ட அயனாவரம் போலீசார் அவர்களை பிடிக்க சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர்கள் இருந்த இடத்தில் இருந்து கீழே குதித்தனர். அப்போது முட்டை சூர்யா என்பவருக்கு வலது கையும் சிலம்பரசன் என்பவருக்கு வலது காலும் எலும்பு முறிவு ஏற்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
3 பேர் சிறையில் அடைப்பு
மேலும் பல்லு கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அபினேஷ் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அயனாவரம் வீராச்சாமி தெருவில் உள்ள ஒரு பூங்காவில் இருந்தபோது சூர்யா அவரிடம் எதற்காக எங்களது ஏரியாவுக்கு அடிக்கடி வருகிறாய் என கேட்டு அடித்து அனுப்பி வைத்துள்ளார்.
ஆத்திரம் அடைந்த அபினேஷ் தனது நண்பர்களோடு சூர்யாவை தாக்க திட்டமிட்டு வந்தது தெரியவந்தது. இந்த தகவலை முன்கூட்டியே அறிந்து கொண்ட சூர்யா தனது நண்பர்களோடு சேர்ந்து அபினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் வெட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து முட்டை சூர்யா, சிலம்பரசன், பல்லு கார்த்திக் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த அயனாவரம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.